2வது டி20 கிரிக்கெட் 5விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி : தொடரை இழந்த இந்தியா

கவுகாத்தி: இங்கிலாந்து பெண்கள் அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில்  பரிதாபமாக தோல்வி அடைந்ததுடன் தொடரையும் இழந்தது. இங்கிலாந்து பெண்கள் அணி  3 ஒருநாள், 3 டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி  தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. டி20 தொடரின் முதல் போட்டியில்  இங்கிலாந்து 41 ரன்கள் வித்தியாத்தில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில்  2வது டி20 போட்டியும் நேற்று கவுகாத்தியில் நடைப்பெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில்  ஜெமீமா ரோட்ரிக்சுக்கு பதிலாக  ஹர்லீன் தியோல், ஸ்மிரிதி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஒருநாள், டி20 போட்டிகளில் அசத்திய மந்தானா இந்த  டி20 தொடரில் சொதப்பி வருகிறார். கேப்டன் பொறுப்பு ஏற்ற பிறகு இந்த போட்டியிலும்  12 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். 2வது ஆட்டக்காரராக களமிறங்கிய ஜெமீமா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்லீன் 14 ரன்களில் ஆட்டமிழந்த போது அணியின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 34ரன்கள். அடுத்துவந்த தீப்தி சர்மா, மிதாலி ராஜ், பாரதி ஃபுல்மாலி ஆகியோர் கொஞ்ச நேரம் விளையாடினர் இவர்கள் முறையே 18,20,18 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் 2 ரன்களை தாண்டாததால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழந்து 111 ரன்கள் எடுத்தது.


இங்கிலாந்து தரப்பில் கேத்ரின் புருன்ட் 3 விக்கெட்களும், லின்சி ஸ்மித்  2 விக்கெட்களும், கேத் கிராஸ், அன்யா ஷ்ரூப்சோல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியலி வியட் வழக்கம் போல் நிலைத்து விளையாட மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினேர்.  இந்திய பந்து வீச்சாளர்களின் வேகம் காரணமாக இங்கிலாந்து ஒரு கட்டத்தில் 11வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய லாரன் வின்பீல்டு டேனியலிக்கு கை கொடுத்த இங்கிலாந்து வெற்றி உறுதியானது.  லாரன் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து 18வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 103. ஆனால் கடைசி வரை களத்தில் இருந்த டேனியலியால் இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 114ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. டேனியலி 64 ரன்களுடனும், கேத்ரின் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ஏக்தா 2 விக்கெட்கள், தீப்தி, ராதா, பூனம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சிறந்த ஆட்டக்காரராக டேனியலி வியட் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 டி20 தொடரில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை மீண்டும் கவுகாத்தியில் நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி