×

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் வரும் 9-ம் தேதி முதல் PUBG கேம் விளையாட தடை: காவல் ஆணையர் உத்தரவு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் பப்ஜி விளையாட்டிற்கு வரும் 9-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. ’பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்’ (Player Unknowns Battlegrounds) என்பதன் சுருக்கம் தான் பப்ஜி. இது ஒரு இணைய விளையாட்டு. இதை மொபைல் போன்களிலும் விளையாடலாம். பப்ஜி கேம் கடந்த ஆண்டு தான் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும், அதற்குள் அதிகம் விளையாடப்படும் வீடியோ கேம்களில் ஒன்றாக பப்ஜி பிரபலமாகி இருக்கிறது. இதற்கிடையே, மத்திய பிரதேசத்தில் பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்த வாலிபர் ஒருவர் தண்ணீர் குடிப்பதாக நினைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக அமிலத்தை எடுத்துக் குடித்தார். தற்போது, ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஸ்மார்ட்போன் பயனாளிகள் மத்தியில் பப்ஜி விளையாட்டின் செல்வாக்கு மட்டும் அல்ல அதன் மீதான மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இச்செய்தி பப்ஜி மோகத்தால் ஏற்படும் விபரீதத்தை உணர்த்தி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் விரும்பும் விளையாட்டாக பப்ஜி மாறியுள்ளது. ஆனால் இந்த விளையாட்டின் மூலம் குழந்தைகளிடையே வன்முறை போக்கு அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் காரணமாக சூரத்தில் இந்த விளையாட்டிற்கு மார்ச் 9 முதல் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சூரத் காவல் ஆணையர் வெளியிட்டுள்ளார். குஜராத்தில் பள்ளிக் குழந்தைகள் மட்டும் பப்ஜி விளையாட ஏற்கெனவே தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PUBG ,district ,Police Commissioner ,Surat ,Gujarat , Gujarat, Surat, PUBG Game, Police Commissioner
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகள்...