×

சுருளி அருவி வறண்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கம்பம்: கம்பம் அருகே சுருளி அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள ஹைவேவிஸ், மேகமலை வனப்பகுதிகளில் சரிவர மழை இல்லை. இதனால் அருவிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து கடந்த 1 வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர்வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தண்ணீர் 4 நாட்கள் மட்டுமே வந்த நிலையில் நேற்று மீண்டும் தண்ணீர் வராதநிலையில் அருவிக்கு வந்த சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மழை இல்லாததாலும், வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதாலும் சுருளிஅருவி வறண்டு காணப்படுகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘சுருளி அருவி இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உள்ளது. இங்கு குளிப்பதால் மகிழ்ச்சி உண்டாகும். ஆனால் மழையின்றி அருவி வறண்டு கிடப்பது ஏமாற்றம் அளிக்கிறது’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suri Falls, Tourists
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...