போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு வழக்கு : நடிகர்கள் அஜித், விஜய், சூர்யாவை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவு

மதுரை : முறையாக போலியோ சொட்டு மருந்து முகாமை நடத்த கோரிய வழக்கில் தென்னிந்திய நடிகர் சங்க செயலர், நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து குறித்து முறையான விழிப்புணர்வு இல்லை என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடிகர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தால் எளிதாக மக்களை சென்றடையும் என நீதிபதிகள் கருத்து
தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ajith ,Vijay ,Surya , Polio Drops, Actor Ajith, Vijay, Surya, High Court Branch
× RELATED விஜய்சேதுபதி ரசிகர்கள் உறுப்பு தானம்