×

லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தின் தேதியை முடிவு செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 10 நாள் கால அவகாசம்

புதுடெல்லி: லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தின் தேதியை முடிவு செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் கொடுத்துள்ளது. லோக்பால் தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் தேர்வு குழுக் கூட்டத்தை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 10 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளது. தேர்வுக்குழு கூட்ட தேதியை முடிவு செய்து தெரிவிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

மத்தியில் லோக்பால் அமைப்பு உருவாக்க உத்தரவு

அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் விசாரிக்கும் அமைப்பாக மாநிலங்களில் லோக் ஆயுக்தாவும், மத்தியில் லோக்பால் அமைப்பும் உருவாக்கும்படி 2017ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த லோக்பால் விசாரணை வளையத்திற்குள் பிரதமரும் வருகிறார். ஆனால், மத்திய மாநில அரசுகள் இந்த உத்தரவை நிறைவேற்றுவதில் இழுபறி செய்து வருகின்றன.  பல்வேறு மாநிலங்கள் லோக் ஆயுக்தா மசோதாவை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளன. மத்திய அரசும் லோக்பால் அமைப்புக்கு நீதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்வுக்குழு அமைப்பதில் தாமதம் செய்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்
கு

லோக்பால் அமைப்பை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை பரிசீலித்த நீதிமன்றம், லோக்பால் நீதிபதியை தேர்வு செய்யும் தேர்வுக்குழு, உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு எங்களுக்கு முழுமையாக மனநிறைவை அளிக்கவில்லை என்பதால், இது குறித்து விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

தேடுதல் குழுவை அமைத்தது மத்திய அரசு

கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி லோக்பால் அமைப்பின் தலைவர், உறுப்பினர் யார்? என்பதை பரிந்துரைக்க தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்தது. அதில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய், எஸ்பிஐ முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பிரசார் பாரதி முன்னாள் தலைவர் சூரிய பிரகாஷ், இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர்.

லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி ரஞ்சன் கோகாய் பிறப்பித்த உத்தரவில், “லோக்பாலை அமைப்பதில் மத்திய அரசு மிகவும் மெத்தனமாகவும், தொய்வுடனும் செயல்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. என உத்தரவிட்டார். இதையடுத்து முந்தைய விசாரணையின் போது லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தேர்வு செய்ய தேர்வுக்குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு மார்ச் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 10 நாட்கள் கெடு

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை தேர்வுக்குழு எப்போது இறுதி செய்யும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, லோக்பால் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக பிரதமர் தலைமையிலான தேர்வுக் குழு கூட்டம் 10 நாட்களுக்குள் கூடும் என்றும் லோக்பால் தேடுதல் குழுவின் தலைவர் ரஞ்சன் தேசாய் தலைமையிலான குழு, லோக்பால் தலைவர் மற்றும் இதர உறுப்பினர்கள் அடங்கிய 3 விதமான பெயர்களை பரிந்துரைத்து இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் லோக்பால் உறுப்பினர்கள் பெயரை இறுதி செய்துள்ளோம் என்றும் நியமிக்க வேண்டிய பணி மட்டும் உள்ளது என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. இதைத் தொடர்ந்து லோக்பால் தேர்வுக்குழு கூட்டத்தின் தேதியை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,meeting ,Lokpal Selection Committee , Lokpal, organization, contempt case, Supreme Court, Central Government
× RELATED வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு...