×

கஜா புயல் ருத்ரதாண்டவம் ஆடு மேய்க்கும் நிலைக்கு தள்ளியது தந்தையின் இறுதி சடங்குக்காக கொத்தடிமையான 10 வயது சிறுவன்

தஞ்சை: தஞ்சை அருகே தந்தையின் இறுதி சடங்குக்கு முன்பணமாக ரூ6,000 பெற்று கொண்டு கொத்தடிமையாக ஆடுகள் மேய்த்த சிறுவன் மீட்கப்பட்டான். தஞ்சை அருகே உள்ள மேலவன்னிப்பட்டு கிராமத்தில் கொத்தடிமையாக இருந்து ஆடுகளை ஒரு சிறுவன் மேய்த்து வருவதாக சைல்டுலைன் அமைப்புக்கு புகார் வந்தது. இதையடுத்து, ஆர்டிஓ சுரேஷ் உத்தரவின்பேரில் தொழிலாளர் ஆய்வாளர் அன்பழகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகை சேர்ந்த அன்பழகன், சைல்டுலைன் இயக்குனர் பாத்திமாராஜ், மண்டல துணை தாசில்தார் அகத்தியர், வருவாய் ஆய்வர் மார்க்ஸ், தலைமை காவலர் மகேஷ் பிரபு ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

அதில், சிறுவனின் பெயர் சூர்யா (10) என்பதும், கொத்தடிமையாக இருந்து 200 ஆடுகளை மேய்த்து வருவதும், பட்டுக்கோட்டை அடுத்த சூரப்பள்ளத்தை சேர்ந்த நடராஜன் மகன் என்பதும், கஜா புயலின்போது மரம் விழுந்ததில் உயிரிழந்த தந்தை நடராஜனின் இறுதி சடங்குக்காக பொட்டலங்குடியை சேர்ந்த மகாலிங்கத்திடம் குடும்பத்தினர் ரூ6,000 முன்பணம் பெற்று சூர்யாவை வேலைக்கு அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து, கொத்தடிமையாக இருந்த சூர்யாவை அலுவலர்கள் மீட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சிறுவனுக்கு உடனடி நிவாரணமாக ரூ20,000 வழங்குவதற்கும், குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்து கல்வி, மறுவாழ்வு அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று அலுவலர்கள் கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Rudrathandamam ,Ghazi ,shepherd ,funeral , Gajah storm, the shepherd level, 10 year old boy
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...