×

அதிமுகவுக்கு தண்ணி காட்டும் தேமுதிக இழுபறி நீடிப்பால் தமாகாவுக்கு கூடுதல் சீட் : ராஜ்யசபா சீட் ஒதுக்கவும் வாய்ப்பு

சென்னை: அதிமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிகவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள அதிமுக, கூட்டணியில் இடம்பெற உள்ள தமாகாவுக்கு கூடுதல் சீட் ஒதுக்க முடிவெடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில்  சூடுபிடித்துள்ளது. அதிமுக, தங்கள் கூட்டணியில் கட்சிகளை இறுதி செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில், அதிமுகவுக்கு, தேமுதிக தண்ணி காட்டி வருவதால் அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய பேச்சுவார்த்தையின் போது தேமுதிகவின் செயல்பாடுகள் அதிமுக தலைவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தற்போது தேமுதிகவின் முடிவை பொறுத்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். தேமுதிகவின் கடைசி நேர நடவடிக்கையால் அக்கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக திட்டமிட்டது. ஆனால் தற்போது தேமுதிக வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தாலும் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமாகாவுக்கு இரண்டு தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை தேமுதிக வராவிட்டால் தமாகா தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதன்படி இரண்டு தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கிடைக்க வாய்ப்பிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamana ,AIADMK ,Rajya Sabha , Extra seat , Tamana,expansion of the dentist ,AIADM
× RELATED கேரளாவில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் (ராஜ்யசபா) பதவிக்காலம் நிறைவு