×

அரசுக்கு பரிந்துரைக்க மட்டுமே முடியும் யாரையும் குற்றவாளி என தீர்மானிக்க முடியாது : ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் வாதம்

சென்னை: ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை போதுமானதா, இல்லையா என்பது  குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில்  வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரனைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடையும் தருவாயில், விசாரணைக்கு தடை கோரி வழக்கு தொடர முடியாது. அனைத்து அம்சங்கள் குறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.  

ஆணையம் தனது விசாரணையை முடிப்பதற்கு முன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் ஆஜராகி வாதிடும்போது, சம்பவம் தொடர்பான  விவரங்களை சேகரித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அரசிடம் ஒப்படைப்பது  ஆணையத்தின் பணியல்ல. விசாரணை நடத்தி, விவரங்களை சேகரித்து பரிந்துரைகளை அரசுக்கு வழங்கலாம். ஆணையம், யாரையும் குற்றவாளி என தீர்மானிக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா, இல்லையா என்பது குறித்து விசாரிக்கவே ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜெயலலிதாவுக்கு மரணம் எப்படி நேர்ந்தது, யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. அப்போலோ மருத்துவமனை மீது பாரபட்சமாக செயல்பட்டதாக ஆணைய நீதிபதிக்கு எதிராக தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. அப்போலோ மருத்துவமனையிடம் இருந்து பெற்ற ஆவணங்களை ஆய்வு செய்ய அரசு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கைக்காக ஆணையம் காத்திருக்கிறது என்று வாதிட்டார். வழக்கு வரும் 8ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anyone ,government ,Armsham Commission Commission , Anyone , only recommend , government
× RELATED தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில்...