×

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் மக்கள் பாதிப்பு பா.ஜ.க.வுக்கு எதிரான அலை திமுக கூட்டணி வெற்றி உறுதி : ராமகிருஷ்ணன் பேட்டி

கும்பகோணம்: `பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மத்திய அரசுக்கு எதிரான அலை வீசுவதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது’ என்று ராமகிருஷ்ணன் கூறினார். கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பாஜ கூட்டணி படுதோல்வியடையும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் மத்தியில் மதசார்பற்ற அரசு அமையும். 5 ஆண்டுகால பாஜ ஆட்சியில் அனைத்துத்துறை செயல்பாடுகளும் படுதோல்வி அடைந்துள்ளன. 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் விவசாயிகளின் வருமானத்தை  இரட்டிப்பாக்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை.

அதற்கு மாறாக விவசாயிகளின் தற்கொலைதான் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக எதையும் செய்யாமல் வரும் எம்.பி. தேர்தலை மனதில் வைத்து விவசாயிகளுக்கு 6 ஆயிரம் என்றும், முதல் தவணையாக 2 ஆயிரம் வழங்குவதாகவும் மோடி அறிவித்தது வாக்குக்கு பணம் அளிப்பது போன்றதாகும். 45 ஆண்டுகளில் வேலையின்மையின் அளவீடு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதா என்று சேகரித்துள்ள புள்ளியியலின் ஆய்வறிக்கையை வெளியிட வேண்டாம் என்று பாஜ அரசு நிறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியால் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மத்திய அரசுக்கு எதிரான அலை வீசிவருவதால் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது.   இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,interview ,Ramakrishnan , Devaluation , DMK against, BJP , win the money
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி