×

டிஎன்பிஎஸ்சி நடத்திய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நேர்காணல் தேதிகள் வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்வில் கலந்து கொண்டவர்களில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை:  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், இளநிலை பகுப்பாய்வாளர், ரசாயனர், தொல்லியல் ரசாயனர் ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல்  தேர்வு  / நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.

பல்வேறு பணிகளில் அடங்கிய இளநிலை பகுப்பாய்வாளர், இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் பதவிகளுக்கு (மொத்தகாலிப் பணியிடங்கள்-24) பிப்ரவரி, 17, 18 ஆகிய தேதிகளில் தேர்வு நடந்தது. இதில்     இளநிலை பகுப்பாய்வாளர் பதவிக்கு 597 பேரும்,  இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர்-739பேரும் கலந்து கொண்டனர். அவர்களில் இளநிலை பகுப்பாய்வாளர் - 32, இளநிலை இரசாயனர், இரசாயனர் மற்றும் தொல்லியல் இரசாயனர் பதவிகள்-30 பேர் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் தேர்வு 14.03.2019ல் நடக்கும்.
 தமிழ்நாடு பொது சுகாதார சார்நிலைப் பணிகளில் அடங்கிய பொது சுகாதாரம்   மற்றும் காப்பு மருந்து துறையில் மக்கள் திரள் பேட்டியாளர் பதவிகளுக்கான (மொத்தக்காலிப்பணியிடங்கள்-3) தேர்வு கடந்த 22.12.2018 நடந்தது. இதில் 223 பேர் கலந்து கொண்ட நிலையில் 9 பேர் தற்காலிகமாக நேர்காணல் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேர்வு 15.03.2019ல் நடக்கும்.

 தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய புள்ளியியல் ஆய்வாளர் பதவிகளுக்கான (மொத்தகாலிப்பணியிடங்கள்-13) தேர்வு கடந்த    23.12.2018ல் நடத்தப்பட்டது. இதில் 4244பேர் கலந்து கொண்ட நிலையில், 39 பேர் நேர்காணல் தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு 15.03.2019ல் நடக்கிறது.  தமிழ்நாடு சிறைத்துறை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி சிறை அலுவலர் பதவிகளுக்கான (மொத்தகாலிப்பணியிடங்கள் ஆண் -16 பெண் - 14) தேர்வு கடந்த    06.01.2019ல் நடந்தது. இதில், 8305 பேர் கலந்து கொண்ட நிலையில், ஆண்கள் பிரிவில், 38 பேரும், பெண்கள் பிரிவில் 42 பேரும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தேர்வு 14.03.2019ல் நடக்கிறது.     

தமிழ்நாடு வேளாண்மை பணியில் அடங்கிய உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான தேர்வு    (உதவி இயக்குநர் -74  தோட்டக்கலை அலுவலர் - 205) கடந்த 12, 13.01.2019ல் நடந்தது. இதில் 1551 பேர் கலந்து கொண்ட நிலையில், 545 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்காணல் வரும் 18.03.2019ல் நடக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DNPCC , Selection of interview interview dates for various positions conducted by Tnpsc
× RELATED உதவி சிறை அலுவலர் பதவிக்கான தற்காலிக...