×

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார். முதல் சுற்றில் கொரிய வீராங்கனை சுங் ஜி ஹியுனுடன் நேற்று மோதிய சிந்து 16-21 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். அடுத்த செட்டில் கடுமையாகப் போராடிய அவர் 22-20 என்ற கணக்கில் போராடி வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் உறுதியுடன் விளையாடிய சுங் ஜி ஹியுன் 21-18 என வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் சக வீரர் எச்.எஸ்.பிரணாயை வீழ்த்தி 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அடுத்து அவர் ஹாங்காங் வீரர் கா லாங்கை சந்திக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : England , All England, Badminton PVC, failed
× RELATED இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில்...