×

அதிமுகவின் பணப்பட்டுவாடாவை தடுக்க அமமுக புதிய வியூகம்

அறந்தாங்கி: நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடாவை தடுத்து, அக்கட்சியை நெருக்கடிக்குள் தள்ள அமமுக புதிய வியூகத்தை வகுத்துள்ளது. அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எவ்வித கவலையும் இல்லாமல் கேசுவலாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்தால் மட்டுமே தேறமுடியும் என்ற நிலையில் மத்திய, மாநிலங்களை ஆளும் கட்சிகள் முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கிவிட்டன. இந்த நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவின் பணப்பட்டுவாடாவை தடுத்து, அக்கட்சி கூட்டணியை தோற்கடிக்க தீவிர முயற்சி செய்து புது வியூகம் வகுத்துள்ளாராம்.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் நடக்கும் தேர்தல்களின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக அதிமுக ஒரு  பெரும்தொகையை ஒதுக்கி வருகிறது. இந்த பணத்தை தேர்தல் தேதி அறிவித்தபின்பு ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வது சிரமமான காரியம் என்பதால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே ஒவ்வொரு தொகுதியிலும், உளவுத்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் வீட்டிற்கு பணம் அனுப்பிவைக்கப்பட்டு, பின்னர் அது பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படும். இந்த தேர்தலிலும் அதுபோன்று அதிமுக பணம் வழங்கினால், அந்த பணம் யாரிடம் வழங்கப்பட்டது என்பதை  அறிந்து அந்த பணம் வெளியில் பட்டுவாடா ஆகாமல் தடுக்கும் பொறுப்பை அமமுகவினர் செய்ய வேண்டும் என தினகரன் ரகசிய உத்தரவை வழங்கியுள்ளார்.

பெரும்பாலும் கட்சிக்கு தொடர்பே இல்லாதவர்கள் வீடுகளிலேயே பணம் பதுக்கப்பட்டு, பின்னர் வினியோகம் செய்யப்படும். பணப்பட்டுவாடா செய்தால் மட்டுமே வெற்றி பெறக் கூடிய நிலையில் உள்ள அதிமுக, பணப்பட்டுவாடாவிற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இவ்வாறு பதுக்கப்படும் பணத்தை அதிமுகவினர் பட்டுவாடா செய்யாமல் தடுத்து, தேர்தல் ஆணையத்தில் சிக்கவைக்க அமமுக திட்டமிட்டுள்ளது.  கூட்டணி  இறுதியான பின்பு, தேர்தல் செலவுகள் குறித்து விவாதித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்படும். அப்போது அமமுகவினர் தீவிரமாக செயல்பட்டு அந்த பணத்தை தேர்தல் ஆணையம் மூலம் முடக்கிவிடுவர். இவ்வாறு செய்வதால், அதிமுக தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும். இதனால் அந்த கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : supermarket , AIADMK, Cashed, Amateur, New Strategy
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்:...