×

பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் விசாவின் கால அளவை அதிரடியாக குறைத்த அமெரிக்கா

வாஷிங்டன்; பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்லும் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாவின் கால அளவை அமெரிக்கா அதிரடியாக குறைத்துள்ளது. இதுநாள் வரை  5 ஆண்டுகள் செல்லத்தக்க விசாவை பாகிஸ்தானியர்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானியர்களுக்கான விசா செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 மாதங்களாக அதிரடியாக அமெரிக்கா குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கை பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் புல்வாமா நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானிற்கு பல வழிகளிலும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என அந்நாட்டிற்கு அமெரிக்காவும் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.

இதனிடையே தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எப்16 ரக விமானத்தை இந்திய விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியதாக அமெரிக்காவிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் அமெரிக்காவிடம் வழங்கி உள்ளது.

இதனால் பாகிஸ்தான் மீது கடும் ஆத்திரத்தில் உள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக தனது பிடியை இறுக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது அமெரிக்கா வரும் பாகிஸ்தானியர்களுக்கு கடும் விசா கட்டுப்பாடு விதித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் அமெரிக்கா வருவதற்கு வழங்கப்படும் விசாவின் கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, ராஜாங்கரீதியாக பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,Pakistanis , Pakistani, USA, Visa
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...