×

மூன்றாவது முறையாக தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தூர் நகரத்துக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி

டெல்லி: தூய்மையான நகரங்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்தூர் நகரத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கினார். இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றது. தூய்மைப் பணியை சிறப்பாக மேற்கொள்ளும் நகரங்களுக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பினை மத்திய அரசு நடத்தி பட்டியல் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில் தூய்மையான நகரங்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்  சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை வழங்கினார்.

இதில் இந்தியாவின் சிறந்த தூய்மையான நகரமாக இந்தூர் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.  மேலும் தூய்மையான சிறிய நகரம் விருது, டெல்லியின் நகராட்சி கவுன்சில் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த கங்கா மாவட்டத்திற்கான விருது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கவுச்சர் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. தூய்மை நகரத்துக்கான விருது பெற்ற இந்தூருக்கு, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.‘மூன்றாவது முறையாக இந்தூர், இந்தியாவின் தூய்மையான நகரம் எனும் விருதினை பெற்றுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து இந்தூரில் கடமை உணர்வுடனும், ஆர்வத்துடனும் பங்காற்றி தூய்மைப்பணி மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cities , third time, cleanest,ist, cities,indur
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை...