×

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழி கண்டுபிடிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழியை மாநில போலீசார் கண்டுபிடித்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் குங்னு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குங்னு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழியை கண்டுபிடித்தனர். மேலும் அங்கிருந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

மேலும் ஜம்மு-காஷ்மீர் எல்லையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக கூடுதலாக 400 பதுங்கு குழிகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. காஷ்மீர் மாநில எல்லையோர பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் சேதமடைவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளான பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் கூடுதலாக தலா 200 பதுங்கு குழிகள் அமைக்கப்பட உள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : district ,Sophian ,Jammu ,Kashmir , discovery,bunkers,Sophian district, Jammu
× RELATED ஜம்மு-காஷ்மீரின் குல்காம்...