×

உலக பணக்காரர்கள் பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ள முகேஷ் அம்பானி!

புதுடெல்லி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 6 இடங்கள் முன்னேறியுள்ள முகேஷ் அம்பானி, 13வது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க வர்த்தக நாளிதழான ஃபோர்ப்ஸ் 2019ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இ-காமர்ஸ் துறையின் ஜாம்பவான் அமேசானின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபேட்டைப் பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தில் தொடர்ந்து நீடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.9.24 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.3.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

எனவே, கடந்த ஆண்டு 19வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, 6 இடங்கள் முன்னேறி 13வது இடத்தைப் பிடித்துள்ளார். 106 இந்திய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி 36வது இடத்திலும், ஹெச்.சி.எல். இணை நிறுவனர் சிவ் நாடார் 82வது இடத்திலும், லக்‌ஷ்மி மிட்டல் 91வது இடத்திலும் உள்ளனர். ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் லேரி எல்லீஸன் 7வது இடத்திலும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் 8வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் 96.5 பில்லியன் சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 2வது இடத்திலும், 86.5 பில்லியன் சொத்து மதிப்புடன் அமெரிக்கத் தொழிலதிபரான வாரென் பஃபெட் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mukesh Ambani ,world , Forbes,Billionaire list,Mukesh Ambani,Jeff Bezos
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...