×

தக்காளி விலை கடும் வீழ்ச்சி

*  தயக்கத்தில் விவசாயிகள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் விளையும் காய், கனிகளுக்கு விலை இல்லாததால் விவசாயிகள், தக்காளி பழங்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரலாமா? வேண்டாமா? என்ற யோசனையுடன் தயக்கத்தில் உள்ளனர். ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, ராஜதானி, சித்தார்பட்டி, ஜி.உசிலம்பட்டி, எரதிம்மக்காள்பட்டி, மொட்டனூத்து, ஏத்தகோவில், போடிதாசன்பட்டி, மறவபட்டி, திம்மரசநாயக்கனூர், டி.சுப்புலாபுரம், புள்ளிமான்கோம்பை, அனைக்கரைபட்டி, மூனாண்டிபட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் விளைந்த தக்காளிகளை பரித்து ஆண்டிபட்டி வத்தலக்குண்டு, தேனி, திண்டுக்கல், திருச்சி, ஒட்டன்சத்திரம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். ஆனால் தக்காளியின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் தக்காளியை பரிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். மேலும் ஒரு சிலர் தக்காளியை பறிக்கலாமா? வேண்டாமா? என்ற தயக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ராஜா கூறுகையில், ‘1 ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைச்சல் செய்ய வேண்டும் எனில் உழுதல், பாத்தி போடுதல், தக்காளி நாற்று வாங்குதல், நடவு கூலி, உரம், பூச்சி மருந்துகளை வாங்குதல், களை உள்ளிட்ட வேலைகளை செய்ய ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.60 ஆயிரம் செலவாகிறது. ஆனால் விளைந்த தக்காளியை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்றால் போதிய விலை கிடைப்பதில்லை’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags :
× RELATED சென்னை பாரிமுனை சுரங்கப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றம்..!!