×

கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவு நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி.எம்.ஐ.இ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், சென்ற பிப்ரவரி மாத நிலவரப்படி வேலைவாய்ப்பின்மை 7.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2018ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை 5.9 சதவிகிதமாக இருந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 40 கோடியாக உள்ளதாகவும், ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40.60 லட்சமாக இருந்ததாகவும் சி.எம்.ஐ.இ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country , Unemployment, India, CMIE, demonetisation
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!