×

லண்டனில் வெடிகுண்டு பார்சல்கள் கண்டெடுப்பு; தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விசாரணை

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையம், ரயில் நிலையம் உட்பட 3 வெவ்வேறு இடங்களில் சிறிய ரக வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் வெடிகுண்டு பார்சல் ஹூத்ரோ அருகே கவுன்சிலோக் கட்டிடத்தில் இருந்ததை ஸ்காட்லாந்து போலீசார் கண்டறிந்து செயலிழக்க செய்தனர். 2-வது வெடிகுண்டு பார்சல் வார்டர்லூ ரயில் நிலையத்தில் கிடந்தது. அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

அடுத்ததாக 3-வது வெடிகுண்டு பார்சல் லண்டன் நகர விமான நிலையத்தில் உள்ள சிட்டி ஏவியேஷன் கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 3-ல் 1 வெடிகுண்டு பார்சல் மட்டுமே திறக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சிறய ரக வெடிபொருட்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வெடிகுண்டு பீதியால் உள்ளூர் விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் மீண்டும் விமான போக்குவரத்து சீரடைந்தது. வெடிகுண்டு பார்சல் காரணமாக ரயில், பேருந்து, விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு பார்சல் தீவிரவாத அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று ஸ்காட்லாந்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : London , London Airport, Railway Station, Bomb Parcel, London
× RELATED லண்டனில் இருந்து வந்தவருக்கு...