×

சர்ஜிகல் ஸ்டிரைக் ஆதாரத்தை வெளியிடுவோம் என கூறவில்லை: பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி

சென்னை: துள்ளிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக் ) குறித்து ஆதாரம் வெளியிடுவோம் என்று நாங்கள் கூறவில்லை என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறினார். நாடாளுமன்றத்தில் ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்ட துவக்க விழா சென்னை மாநகராட்சியில் நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.  அத்திட்டத்தை தொடங்கிவைக்கும் அடையாளமாக, 10 பேருக்கு அடையா அட்டையினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: மத்திய அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் நாடுமுழுவதும் 42 கோடி பேர் பயனடைவர். தமிழகத்தில் 72 லட்சம் பேர். தற்போதைய நிலவரப்படி இத்திட்டத்தில் 20 ஆயிரம் பேர் இணைந்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு தாலுகாவிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவை மையங்களுக்கு சென்று, அங்கு கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்றார். பின்னர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:  இந்தியா தாக்குதல் நடத்திய இடத்தில் தான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. மும்பையில் நடந்த தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்கள் குறித்த விபரம் அளித்தோம். ஆனால் அவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் பாகிஸ்தான் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை. அப்படியிருக்கும் சூழ்நிலையில் புல்வாமாவில் தாக்குதல் நடந்தப்பட்டது. இதை எவ்வளவு நாளைக்கு இந்திய அரசு பொறுத்துக்கொண்டு இருந்தாலும், பாகிஸ்தானில் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. அதனால் சம்மந்தப்பட்ட இடத்தில் மட்டும் துள்ளியத்தாக்குதல் நடத்தப்பட்டது.  

அபிநந்தனுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களும், ‘ஏர்போர்ஸ்’ம் தான், அவர் எப்ேபாது பணிக்கு திரும்ப வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள். துள்ளியத்தாக்குதல் குறித்து ஆதாரங்கள் வௌியிடுவதாக நாங்கள் கூறவில்லை. பாகிஸ்தான் தன் நாட்டில் தீவிரவாதிகளை ஒழித்தால் மட்டுமே, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’’ என்றார்.   

ஜெயலலிதா இருந்தபோது அரசியல் சூழ்நிலை வேறு
அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், ‘‘தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எப்போது இணைவார்கள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஜெயலலிதா இருந்த போது அனைத்து கட்சியினரும் தேடி வந்து கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் படி கேட்டார்கள். தற்ேபாது நாங்கள் செல்கிறோம் என கேட்கிறீர்கள். இதற்கு அப்போது இருந்த அரசியல் சூழ்நிலை வேறு, தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை வேறு’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nirmala Seetharaman , Surgeon Strike, Defense Minister Nirmala Seetharaman
× RELATED ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஆவணங்களில்...