×

டிக்டாக்கில் டூயட் பாடியது போலீசா? சின்னத்திரை நடிகர்கள் குறும்பு: சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து விசாரணை

சென்னை: போலீஸ் சீருடையில் டிக்டாக் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சின்னத்திரை நடிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அண்மைகாலமாக சிறுவர்கள், இளம்பெண்கள், வாலிபர்கள் முதல் முதியவர்கள் வரை பாடலுக்கு ஏற்ப நடனம் மற்றும் பிடித்த நடிகர்களின் வசனங்களை பேசி தங்களின் நடிப்பு திறனை டிக் டாக் ஆப் மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த மோகம் காவல் துறையையும் விட்டு வைக்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சென்னை பரங்கிமலை ஆயுதப்படை துணை கமிஷனர் ஒருவர் டிக் டாக்கில் பாடல்களை பாடி அசத்தினார். அதேபோல், ஆயுதப்படை காவலர்கள், சக பெண் காவலர்களுடன் சேர்ந்து டிக் டாக்கில் பதிவு செய்து வந்தனர்.

பணியின்போது காவலர்கள் சீருடையில் டிக் டாக் ஆப் பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், தமிழக டிஜிபி டி.ேக.ராஜேந்திரன் எஸ்ஐக்கு கீழ் உள்ள காவலர்கள் யாரும் பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்று தடைவிதித்து சுற்றறிக்கை அனுப்பினார். அதையும் மீறி பணியின்போது செல்போன் பயன்படுத்திய 15க்கும் மேற்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு பணியின்போது ஆண் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது சக பெண் உதவி ஆய்வாளர் ஒருவருடன் சினிமா பாடலுக்கு ஏற்றவாறு காவல் துறை சீருடையில் “காதல் பரிசு” படத்தில் வரும் காதல் மகராணி என்று தொடங்கும் பாடல் வரிகளான “பூவை நீ.... பூ மடல்.... பூவுடல்....தேன் கடல்....தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்...” என்ற பாடலுக்கு ஏற்றவாறு நலினத்துடன் காதல் ஜோடிகள் போன்று ஆடி மகிழும் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில்  வெளியாகியது.
இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது கோவையில் நடைபெற்ற நிகழ்வில் சின்னத்திரை நடிகர்கள் காவலர் சீருடையில் டிக்டாக் செயலி மூலம் பாடல்களுக்கு நடனமாடி வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் காவல்துறை வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது,

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : duet ,video spread , Dictate, Duet, Cinematic Actors Naughty
× RELATED ஆண் நாய்க்காக டூயட் பாடிய யுவன் சங்கர் ராஜா