×

‘விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிச்சா உண்மை வரும்’ அல்வா கொடுத்து அம்மாவ சாகடிச்சிட்டாங்க...அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக் தகவல்

புதுச்சேரி: ஜெயலலிதாவுக்கு அல்வா கொடுத்து கொன்றுவிட்டதாக அமைச்சர் சி.வி. சண்முகம் பரபரப்பாக பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசியதாவது: இன்றைக்கு உங்களிடம் வருபவர்கள் எல்லாம் ஜெயலலிதா போட்ட எச்சில் சோற்றை சாப்பிட்டவர்கள்தான். ஜெயலலிதாவின் செருப்புக்கு காவல் கிடந்தவர்கள் எல்லாம் சொல்கிறார்கள், அதிமுகவை அழிப்பேன் என்று, எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இப்படி சொன்னவர்களெல்லாம் ஜெயிலில் களி தின்கிறார்கள். நீயும் சீக்கிரம் செல்லத்தான் போகிறாய், ஏற்கனவே கடலூர் ஜெயில்ல ஒரு ஆண்டுகாலம் களிதின்றவர்கள்தான்.  இன்னும் கொஞ்ச நாள்தான் கத்திக்கொண்டிருப்பார்கள், பிறகு நிரந்தரமாக ஜெயிலில் இருக்கப்போகிறீர்கள்.  அம்மாவையே நாங்க பார்த்துவிட்டோம் என்ற ஆணவம் திமிர்தான் இப்படி பேச வைக்கிறது. ஜெயலலிதாவின் ஆன்மா இவர்களை சும்மா விடாது.  

நன்றாக இருந்தவரை கடைசி காட்சி சினிமாவில் வருவது போன்று, மாரடைப்பு என்று கூறி  தீர்த்துகட்டிவிட்டார்கள். மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, வராண்டாவில் எல்லாம் ரத்தம் சிதறி கிடந்தது ஏன்? எங்கிருந்து வந்தது?  இதனை நாங்கள் கேட்க மாட்டோமா? இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என்று அப்போதே சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். எல்லாம் சொல்வார்கள். விஷம் கொடுத்துதான் ஒருவரை சாக அடிக்க வேண்டியதில்லை. வெல்லம் கொடுத்தும் சாகடிக்கலாம். அதுதான் ஜெயலலிதா கதையிலும் நடந்தது. கடுமையான சர்க்கரை வியாதியுள்ளவருக்கு மருத்துவமனையில் இருக்கும்போது யாராவது அல்வா கொடுப்பார்களா? இவர்கள் கொடுத்தார்கள். கிராமத்தில் இருக்கும் படிக்காத வைத்தியன் கூட அப்படி செய்ய மாட்டான்.

உயிருக்கு போராடும் நிலையில் இருந்த அம்மாவுக்கு இனிப்பு கொடுக்கிறார்கள் என்றால் அவர்களின் நோக்கம்தான் என்ன?  சர்க்கரை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த நோய் முற்றி, மரணம் இயற்கையாக வர வேண்டும். இப்படி திட்டம் போட்டு நம்மிடம்  இருந்து ஜெயலலிதாவை பிரித்துவிட்டார்கள்.   இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alva ,Minister CV , CV Shanmugam
× RELATED தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கியுள்ளனர்: பிரதமர் மோடி பேச்சு