×

பாஜ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்

புதுடெல்லி: பாஜ.வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் ஹேக்கர்களால் திடீரென முடக்கப்பட்டது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், கட்சிகள் தங்களுக்கென பிரத்யேக இணையதள பக்கத்தை கொண்டுள்ளன. பாஜவும் http://www.bjp.org, என அதிகாரப்பூர்வ இணையதளத்தை கொண்டுள்ளது. பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களின் பிரசார பயணங்கள் குறித்த தகவல்கள், கட்சியின் செயல்பாடு, புகைப்படங்கள் உள்ளிட்டவை இந்த இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்நிலையில், பாஜ.வின் இந்த இணையதளம் நேற்று திடீரென முடங்கியது. இணையதளத்தின் திரையில் சில செய்திகளும், பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கெல்லுடன் இருக்கும் புகைப்படம் மட்டுமே இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஹேக்கர்களிடம் இருந்து இணையதள பக்கத்தை மீட்கும் முயற்சியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hackers , Hackers who shut down , website
× RELATED ஹேக்கர்கள் ஊடுருவல் மோடி டிவிட்டர்...