×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி... 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  250 ரன்களை மட்டும் எடுத்தது. மேலும் ரோகித் பூஜிய ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  தவான் 21 ரன்கள் எடுத்தார். ராயுடு 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

விஜய் ஷங்கர் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதனை அடுத்து சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பாவின் ஒரே ஓவரில் ஜாதவ் 11, தோனி 0 ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய ஜடேஜாவுடன் இணைந்த கோஹ்லி தனி வீரராக போராடினார். கூல்டர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர் ஒரு நாள் அரங்கில் 40-வது சாதத்தை அடித்தார். பின்னர் ஜடேஜா 21 ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் கோஹ்லி 116 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை அடுத்து குல்தீப் 3, பும்ரா 0 அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனையடுத்து இந்திய அணி 48.2 ஓவரில் 250 ரன்களில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

இதனை தொடர்ந்து ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 242 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,Australia ,Indian ,team , Australian team , won, 2nd ODI
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி