×

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை: டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தகவல்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி இல்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி தேவை என்பதால் காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கருதிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
ஆனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமரசம் செய்ய முற்பட்டபோதிலும், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இந்த சூழலில் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்டபாளர்களை ஆம் ஆத்மி அறிவித்தது. வேட்பாளர்களை அறிவித்துவிட்டபோதிலும் கூட்டணி கதவை ஆம் ஆத்மி மூடவில்லை. இந்த நிலையில், தனித்து போட்டியிடும் முடிவில் மாற்றமில்லை என்று காங்கிரஸ் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய டெல்லி முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித், டெல்லியில் கூட்டணி அமைத்து போட்டியிடும் திட்டம் இல்லை. ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விவாதித்த பிறகு இந்த முடிவை எடுத்துள்ளோம். டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு வெற்றிபெறும் என கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sheila Dikshit ,Lok Sabha ,Aam Aadmi Party ,Delhi Congress , Lok Sabha election, AAP, Coalition, Delhi, Congress, Sheila Dikshit
× RELATED மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்பிக்கள் நாளை பதவியேற்பு