×

2020ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை: ஹிலாரி கிளிண்டன் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஹிலாரி கிளிண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 2016ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். கடைசி நேரத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டு ட்ரம்பிடம் அவர் தோல்வி அடைந்தார். இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்விக்கு பதிலடி தருவார் என்று பேசப்பட்டது. இந்த நிலையில், 2020ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று ஹிலாரி கிளிண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசியலில் இருந்து ஒதுங்கிப்போவதில்லை என்றும், நாட்டின் நலன் சார்ந்த விவரங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை பணியாக செய்யப்போவதாகவும் கூறினார்.

இது தொடர்பாக, அவர் தனியார் பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமேரிக்காவில் நடக்கும் சம்பவங்கள் தன்னை ஆழமாக பாதிப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னை மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும், தான் எங்கும் போகமாட்டேன் என்றும் கூறியிருந்தார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களாகப் போட்டியிட எண்ணுபவர்களிடம் பேசி வருவதாக தெரிவித்தார். ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகளின் பட்டியலே நீளமாக இருக்கிறது. அதுகுறித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளேன் என ஹிலாரி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பல மூத்த அமெரிக்க அரசியல்வாதிகள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதில் செனட்டர் புக்கர், கமலா ஹாரிஸ் மற்றும் 2016ம் ஆண்டு கிளிண்டனிடம் தோல்வியுற்ற செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,US ,announcement ,Hillary Clinton , Hillary Clinton,Presidential Election,USA,Announcement
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...