×

மொரப்பூரில் கடும் வறட்சி : பொக்லைன் மூலம் மரவள்ளி அறுவடை செய்யும் விவசாயிகள்

அரூர்:  அரூர் அருகே மொரப்பூர் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால், மரவள்ளி சாகுபடி செய்த விவசாயிகள் பொக்லைன் மூலம் அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், 80 சதவீத மரவள்ளி அறுவடை செய்யப்பட்டு விட்டது. அறுவடை செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள், அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், சேலம், மல்லூர், ஆத்தூர், ராசிபுரம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் செயல்படும் சேகோ ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, தர்மபுரி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியால், விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கிற்கு தேவையான தண்ணீர் இல்லாததால், தற்போது பொக்லைனை பயன்படுத்தி மரவள்ளி கிழங்ககை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கரில் பொக்லைன் மூலம் மரவள்ளி கிழங்கு எடுக்க, 8 மணி நேரத்திற்கு 6,500 வரை செலவாவதால், போதிய வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, மரவள்ளி கிழங்கிற்கு விலையை உயர்த்தி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : drought ,Morappur ,Poklin , Morappur, drought, cassava
× RELATED வறட்சியை நோக்கி நகரும் பெங்களூரு.. தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதி!!