புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி வழங்கக்கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: புல்வாமா தாக்குதல் பற்றி விசாரிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வீரமரணம் அடைந்த வீரர் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி வழங்கக்கோரி ரமேஷ் என்பவர் மனு அளித்திருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புல்வாமா தாக்குதலில் விசாரிக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்., 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, ஆதில் என்ற தீவிரவாதி 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் வந்த காரை, சிஆர்பிஎப் வீரர்களின் வாகனத்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

நீதி விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனிடையே புல்வாமா தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிவு செய்தது. இதனிடையே புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் வினீத் தந்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரூ.2 கோடி நிதியுதவி கோரிய மனு தள்ளுபடி

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர் குடும்பங்களுக்கு ரூ.2 கோடி வழங்கக்கோரி ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரப்பட்டு இருந்தார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேழும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Pulwama ,warrior families , Pulwama, attack, Supreme Court, dismissal, martial law
× RELATED போலீசை தாக்கிய ரவுடி முன்ஜாமீன் கேட்டு மனு