×

ஆத்தூர், தலைவாசலில் மழை குறைவால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை : வெளியூரில் வைக்கோல் வாங்கும் விவசாயிகள்

ஆத்தூர்: ஆத்தூர், தலைவாசல் பகுதியில், மழை இல்லாததால், கால்நடைகளுக்கு  தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து விவசாயிகள் வைக்கோலை வாங்கி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் பகுதியில் விவசாயிகள் தங்களின் அன்றாட செலவினத்திற்காக கால்நடை மற்றும் கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  தற்போது போதிய மழையில்லாத காரணத்தால், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை, வெளியூர்களிலிருந்து விவசாயிகள்  கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: விவசாயத்துடன், உப தொழிலாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டு வருகின்றோம். போதிய  மழையில்லாததால் விளைச்சல் இன்றி விளை நிலங்கள் காய்ந்துள்ளன. இதனால்  கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைக்காத நிலையில், பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது. எனவே தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதியில்  வைக்கோல்களை விலைக்கு வாங்கி அதனை வேன்களில் ஏற்றி கொண்டு, கால்நடைகளுக்கு  தீவனமாக வழங்கி பராமரித்து வருகிறோம். கால்நடை துறை மூலம் ஏற்கனவே வைக்கோல்  வழங்கப்பட்டது. தற்போது அரசு மீண்டும் வைக்கோல் வழங்கிட நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதன் மூலம் எங்களுக்கு செலவு குறையும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Atoor , Attur, cattle, hay
× RELATED ஆத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்