×

அரவக்குறிச்சி பகுதியில் கொளுத்தும் வெயில் எதிரொலி : தென்னங்கீற்று பந்தல் அமைக்கும் தொழிலாளர்களுக்கு கிராக்கி

அரவக்குறிச்சி:  அரவக்குறிச்சி பகுதியின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயிலின் காரணமாக ஏற்படும் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தென்னங்கீற்று மூலம் கோடை பந்தல் அமைக்கப்படுகின்றது.  இதனால் பந்தல் அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்பொழுது கோடை காலம் துவங்கி ஆரம்பத்திலேயே வெப்பம் கடுமையாக உள்ளது. கோடை வெயில் காரணமாக அரவக்குறிச்சி பகுதியில்  கடும் வெயில் அடிக்கின்றது. அவ்வப்போது அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைக்கின்றது. நேற்றைய வெயில் அதிக அளவில் இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மே மாதத்தில் அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாகும்.

இந்நிலையில் அரவக்குறிச்சி பகுதியின் பல்வேறு இடங்ளில் கடும் வெயிலின் காரணமாக ஏற்படும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள தென்னங்கீற்று கோடை பந்தல் அமைப்பது அதிகரித்துள்ளது. தெருக்களிலும், முக்கிய சாலைகளிலும் உள்ள கடைகளுக்கு பொருள்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக கடைகள் முன்பும், சிறிய பெரிய நிறுவணங்கள் முன்பும், பெரிய வீடுகளின் வாசல் மற்றும் வீடுகளின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல் பகுதியிலும் கோடை பந்தல் அமைக்கப்படுகின்றது.  மேலும் முக்கிய தெருக்கள் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு வருகின்றது.

இதனால் பந்தல் அமைப்பாளர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தென்னங்கீற்று கோடை பந்தல் அமைப்பாளர்கள் கூறியதாவது, நாமக்கல், சேலம், பொள்ளாச்சி உள்ளிட்ட தென்னங்கீற்றுகள் அதிகமாக கிடைக்கும் இடங்களிலிருந்து கீற்றுக்ளை வாங்கி வருகின்றோம். பத்து அடிக்கு பத்து அடி அளவிற்கு ரூ 500ல் இருந்து ரூ.ஆயிரம் வரை கால அளவிற்கு தகுந்தாற்போல பந்தல் அமைக்க கட்டணம் வசூலிக்கின்றோம். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் ஆரம்பத்திலேயே அதிகமாக உள்ளதால் பந்தல் அமைப்பதும் அதிகரித்துள்ளது. மற்ற காலங்களை விட தற்போது தென்னங்கீற்றுகள் தேவையும் அதிகரித்துள்ளது, இதனால் வழக்கத்தை விட விலையும் சற்று அதிகரித்துள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Echo ,area ,Aravakurichi , Aravakirichi, Veil, Teenagekettu
× RELATED இளையராஜா வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்