×

செவ்வாய் கிரகத்தில் தரைக்கு அடியில் தண்ணீர்: நெதர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

நெதர்லாந்து: செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டில் யூட்ரெச் பல்கலைக்கழக விண்வெளி துறையினர் செவ்வாய் கிரகத்தில் உள்ள செயலிழந்த எரிமலைகளில் செயற்கைகோள் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதில் அந்த எரிமலைகளுக்கு அடியில் 4,500 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் இருப்பதற்கான தடையங்கள் கிடைத்துள்ளன. ஒரு காலத்தில் பூமியை போலவே நீர் நிரம்பியிருந்த செவ்வாய் கிரகம் பின்னர் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் மேற்பரப்பு நீரை முற்றிலுமாக இழந்தது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் தற்போது செவ்வாயின் அடிப்பரப்பில் நீர் உள்ளது என்றும், நீரில் உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் உள்ளது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் செவ்வாய் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் பணி கிரகத்தின் தென் துருவத்திற்கு கீழே ஒரு நீர் நிரம்பிய குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து செவ்வாயில் நிலத்தடி நீர் இருப்பது பற்றிய முதல் ஆதாரங்களை யூட்ரெச் பல்கலைக்கழக விண்வெளி ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த நிலத்தடி நீர், சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பதை பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country ,Mars ,researchers , Mars Planet, groundwater, Netherlands, space researchers
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...