கல்லூரி கிரிக்கெட் லயோலா, டபுள்யு.சி.சி அணிகள் சாம்பியன்

சென்னை: கல்லூரிகளுக்கு இடையிலான பவித்சிங் நினைவு தென்மண்டல டி20 கிரிக்கெட் போட்டியின் மகளிர் பிரிவில்  பெண்கள் கிறித்துவக் கல்லூரி (டபுள்யு.சி.சி) அணியும், ஆண்கள் பிரிவில் லயோலா கல்லூரியும் சாம்பியன் பட்டம் வென்றன. வேளச்சேரி, குருநானக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்த மகளிர் பிரிவு பைனலில் எத்திராஜ் - கிறித்துவக் கல்லூரி அணிகள் மோதின. கிறித்துவக் கல்லூரி 20 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. எத்திராஐ் அணி 20 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 69 ரன் மட்டுமே எடுத்தது. 72 ரன் வித்தியாசத்தில் வென்ற கிறித்துவக் கல்லூரிக்கு கோப்பையுடன் 20 ஆயிரம் பரிசளிக்கப்பட்டது. இந்த அணியின் அஷ்வதி சங்கர் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆண்கள் பிரிவு பைனலில் குருநானக்  ஏ - லயோலா மோதின.  குருநானக் ஏ 20 ஓவரில் 7விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய லயோலா  2 விக்கெட் இழப்புக்கு  160 ரன் எடுத்து வென்றது. இந்த அணிக்கு கோப்பையுடன்  20,000 வழங்கப்பட்டது. ராஜ்குமார் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>