×

கொடநாடு கொலை வழக்கில் முதன்முறையாக கைவிலங்குடன் சயான், மனோஜ் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட 5 பேர் ஊட்டி கோர்ட்டுக்கு முதன்முறையாக கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டனர். நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் 24ல் காவலாளி கொலை மற்றும் கொள்ளை நடந்தது. இதில், ேகரள மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 ேபருக்கும் நீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் வழங்கியிருந்தது.  

இந்நிலையில், தலைமறைவாக இருந்த சயான், வாளையார் மனோஜ் ஆகியோரை கடந்த 1ம் தேதி கேரள மாநிலம் திருச்சூரில் தமிழக போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் கடந்த 2ம் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை, 4ம் தேதி ஊட்டி ேகார்ட்டில் ஆஜர்படுத்தவும், அதுவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி வடமலை உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை நேற்று நடந்தது. இதில் சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் நேற்று ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் 10 பேரும் ஆஜராக உத்தரவிட்டார். கைவிலங்குடன்: கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை கடந்த ஒன்றரை ஆண்டில்  ைக விலங்கு போட்டு அழைத்து வந்ததில்லை. கொடநாடு கொலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது என சயான் மற்றும் வாளையார் மனோஜ் தெரிவித்த பின், இவ்வழக்கு சூடு பிடித்தது. சிறையில் உள்ள இவர்கள் இருவர் உட்பட 5 பேரை நேற்று முதன் முறையாக  கை விலங்கு போட்டு கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj Ooty ,Kodanad , Saanan and Manoj Ooty , Kodanad murder case,first time
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை