×

ஊரக பகுதியில் 40.7 லட்சம், நகர பகுதியில் 11.6 லட்சம்பேர் 2,000 நிதியுதவி திட்டத்தை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி

மதுரை: ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதியுதவி பெற ஊரகப்பகுதிகளில் 40 லட்சத்து 70 ஆயிரத்து 881 பேரும், நகர் பகுதிகளில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 234 பேரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர் என கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து  நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுரையை சேர்ந்த தினேஷ்பாபு ஐகோர்ட் மதுரை கிளையில்  தாக்கல் செய்த மனுவில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. உண்மையான பயனாளிகளை கணக்கெடுப்பதிலும் சிக்கல், முறைகேடுகள் நிகழும். ஆகவே,  கணக்கிடுவதில் உள்ள முரண்களை களைந்து தேர்தல் முடிந்தபின் உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்க வேண்டும். அதுவரை இந்த திட்டத்தை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இம்மனு  நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முறையாக கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். ஊரகப்பகுதிகளில் 40 லட்சத்து 70 ஆயிரத்து 881 பேரும், நகர் பகுதிகளில் 11 லட்சத்து 60 ஆயிரத்து 234 பேரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று (நேற்று) காலை இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும் தெரிவித்தார்.  மேலும், இதேபோன்ற கோரிக்கையை முன்வைத்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவு நகலையும் தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,city area , 40.7 lakh , rural areas, 11.6 lakh 2,000, sponsored scheme , city area , withdraw the petition
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்