×

மனைவிகளை கைவிட்ட45 என்ஆர்ஐ.களின் பாஸ்போர்ட் ரத்து: மேனகா காந்தி தகவல்

புதுடெல்லி: மனைவியை கைவிட்டு தலைமறைவாகிய 45 வெளிநாட்டுவாழ் இந்தியர்களின்(என்ஆர்ஐ) பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தங்களுடைய மனைவியை சட்டவிரோதமாக கைவிட்டு விடுவதால் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதனைத் தடுக்க, தாய்நாட்டில் திருமணம் செய்துக் கொள்ளும் வெளிநாட்டுவாழ்  இந்தியர்கள், திருமணத்தை 7 நாட்களுக்குள் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், மனைவியை கைவிட்டு தலைமறைவாகிய என்ஆர்ஐ.கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தது. அதன்படி, 70 வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் மனைவியை கைவிட்டு சென்றிருப்பது தெரிய வந்தது.
அவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஒப்புதல் அமைப்பு தரப்பில்  ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அவர்களில் 8 பேரது பாஸ்போர்ட் கடந்தாண்டு ஜூலையில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை செயலர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் ஒருங்கிணைந்த ஒப்புதல் அமைப்பின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மேனகா காந்தி, 45 என்ஆர்ஐ.களின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. என்ஆர்ஐ. கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க உதவும் வகையில், மாநிலங்களவையில் திருத்தம் கொண்டு வர மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதா முடக்கப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NRIs ,wives ,Menaka Gandhi , Wives, 45 NR, Cancel Passport, Menaka Gandhi
× RELATED குறிப்பிட்ட பகுதியில் நுழைய கோர்ட்...