×

கட்சி கொடி கம்பத்தை அகற்றியதால் அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயற்சி: நந்தம்பாக்கத்தில் பரபரப்பு

ஆலந்தூர்: சாலை யோரம் அமைக்கப்பட்ட கட்சி கொடி கம்பத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றியதால் அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நந்தம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தம்பாக்கம் 158வது வட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் பர்மா கண்ணன். இவரது சகோதரர் மணிகண்டபாபு (32). இவர், 158வது வட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். இவர்கள்,  அதிமுக நிர்வாகிகள் உதவியுடன்  நந்தம்பாக்கம் மவுண்ட் பூந்தமல்லி சாலையில் காவல்நிலையம் எதிரே  71 அடி உயர அதிமுக கொடிக்கம்பத்தை  நேற்று முன்தினம் இரவு கிரேன் மூலம்  அமைத்தனர். நேற்று அதிகாலை இந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, நடைபாதை ஓரத்தில் வளைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றபோது அதிமுக கொடிக்கம்பத்தினை இரவோடு இரவாக  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  அகற்றியது  தெரியவந்தது.

இதனையடுத்து, அதிமுகவினர் வட்டசெயலாளர் பர்மா கண்ணன்  தலைமையில்  நந்தம்பாக்கம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தங்கராஜிடம் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரி இங்கு வந்து  கொடிக்கம்பத்தினை  உடனடியாக நடவேண்டும். மேலும்,  நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்றனர்.  இன்ஸ்பெக்டர், அவர்களை சமாதானப்படுத்தினார். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்  வராததால், அதிமுகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.   அப்போது, அங்கு வந்த பாசறை செயலாளர்  மணிகண்டபாபு திடீரென தான்கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடல் எங்கும் ஊற்றிக் கொண்டு காஸ் லைட்டரைக் கொண்டு பற்ற வைத்து  தீக்குளிக்க   முயன்றார்.அவரை, மடக்கி பிடித்து லைட்டரை பிடுங்கினர். அவர் உடல் மீது தண்ணீரை ஊற்றினர்.  இந்த சம்பவம்  குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரங்கிமலை உதவிக்கமிஷனர் கோவிந்தராஜ், இந்தச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Nandambakkam , AIADMK personality, trying to fire, Nandambakkam,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...