×

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சுழன்றடித்த சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அலபாமா: அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் அடுத்தடுத்து தாக்கிய சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு அலபாமாவின் லீ பிராந்தியத்தில் ஏற்பட்ட டோர்னாடோ என்ற சுழிக்காறு மணிக்கு 266 கிலோமீட்டர் வேகத்தில் கோர தாண்டவமாடியது. இதன் காரணமாக பலர் உயிரிழந்தனர். பலியானவர்களில் சிறுவர்களும் அடங்குவர். அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணத்தின் சில பகுதிகளில் அடுத்தடுத்து பலத்த வேகத்துடன் சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்கள் காற்றில் பறந்தன.  அலபாமா மாகாணத்தின் தென்கிழக்குப் பகுதி மற்றும் ஜார்ஜியா மாகாணம் அருகில் சில பகுதிகளில் அடுத்தடுத்து பலத்த வேகத்துடன் சூறாவளி சுழன்றடித்தது. இதில் வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்கள் காற்றில் பறந்தன. ஒபேலிக்கா என்ற இடத்தை மையம் கொண்ட சூறாவளியில் அங்கு மட்டும் சுமார் 12 பேர் உயிரிழந்தனர்.

சூறாவளி புயலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 22-ஆக உயர்ந்துள்ளது. சூறாவளிப் புயலில் பலர் காணாமல் போயுள்ளநிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அம்மாகாண அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர் .காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதி தற்போது இருள் சூழ்ந்து காணப்படுவதால், தேடுதல் பணிகளை மேற்கொள்வது அபாயகரமாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், கடுமையான சூறாவளி வீசக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையால் அலபாமாவில் சூறாவளி அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hurricane ,state ,United States ,Alabama , Alabama, United States, hurricane
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!