×

காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து மலேசியா பரிசீலனை

கோலாலம்பூர்: காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் தொடங்குவது பற்றிப் பரிசீலிக்கப் போவதாக, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். தேடுதல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் நல்ல பரிந்துரைகளை முன் வைத்தால், அரசாங்கம் அதனை முன்னெடுத்துச் செல்லும் என அவர் தெரிவித்தார். கடந்த 2014 ம் ஆண்டு மார்ச் மாதம், 8-ம் தேதி, 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானம், நடுவழியில் காணாமல் போனது. அந்த விமானம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்தபோது மாயமானது.

அது இன்று வரை விமானப் போக்குவரத்து துறையின் ஆகப் பெரிய மர்மமாக நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள், இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 140 மில்லியன் டாலர் பொருட்செலவில் தேடுதல் பணிகளை மேற்கொண்டன. 2 ஆண்டுகளாக  நீடித்த அந்தப் பணிகளில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனையடுத்து 2017 ஜனவரி மாதம் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இந்நிலையில் காணாமல் போன  MH370 விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் தொடங்குவது பற்றிப் பரிசீலிக்கப் போவதாக, அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Malaysian ,search ,flight , MH370, Malaysia,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...