×

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருக்கும் பகோஸ் பகுதியை மீட்க அரசு படைகள் தீவிரம்

பெல் அல்சோர்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருக்கும் கடைசி பகுதியை மீட்பதற்கான சண்டை தீவிரமடைந்து வருகிறது. பெல் அல்சோர் மாகாணத்தில் இருக்கும் பகோஸ் கிராமம் தான் ஐஎஸ் பயங்கரவாதிகள் வசம் இருக்கும் கடைசி பகுதியாகும். இங்கிருந்தும் அவர்களை விரட்டியடிக்க அமெரிக்க தலைமையிலான சிரிய அரசு படைகள் அங்கு தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. கடந்த ஞாயிற்றுகிழமை முதல் தொடர்ந்து 18 மணிநேரம் நீடித்த சண்டையில் அரசு படைகள் பகோஸில் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தோல்வியை தவிர்க்கும் வகையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். எனினும் இந்த தாக்குதலில் வீரர்கள் யாரும் உயிரிழக்க வில்லை என்று கூறப்படுகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் சிரிய அரசு படைகள் இடையே கடந்த ஓராண்டாக சண்டை நீடித்து வருகிறது. இந்நிலையில் இந்த பகோஸ் பகுதியை கைப்பற்றிவிட்டால் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government forces ,territory ,terrorists ,Pakistani ,Syria , Syria, IS terrorists, government force
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...