×

6 நாடுகள் மட்டுமே பணியிடங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது : உலக வங்கி அறிக்கையில் தகவல்

நியூயார்க் : பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் 6 நாடுகள் மட்டுமே முன்னணியில் இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அனைத்து நாடுகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு, விடுமுறை, ஊதியம் என அனைத்து பிரிவுகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் நாடுகளை உலக வங்கி பட்டியலிட்டது.

இதில் பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க்,லாட்வியா, லக்ஸம்பர்க் மற்றும் சுவீடன் ஆகிய 6 நாடுகள் மட்டுமே பணியிடங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இதில் இந்தியா 71. 25%மதிப்பெண் பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பட்டியலில் முன்னணியில் இருக்கும் பிரான்ஸ் நாடு, பெண்கள் மீதான வன்முறை, பணியிடங்களில் பாலியல் தொந்தரவு போன்ற பிரச்னைகளில் பெண்களை பாதுகாக்க கடுமையான சட்டங்களை நிறைவேற்றியுள்ளது.மகப்பேறு விடுமுறை, ஊதியம் என பல சலுகைகளையும் வழங்குகிறது. ஆனால் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இதில் 47 மதிப்பெண்களையே பெற்றுள்ளன.

அமெரிக்கா 97.5,
ஆஸ்திரேலியா 96.88,
ஜெர்மனி 91.88,
பிரிட்டன் 83.75
இந்தியா 71.25
பாகிஸ்தான் 46.25
கத்தார் 32.50,
 ஈரான் 31.25,
சூடான் 29.38,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 29.37
சவுதி 25.63


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : countries ,women ,workplaces ,World Bank , Workmanship, men, world bank, women
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...