×

ஏழை குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி அளிப்பதை நிறுத்தி வைக்க கோரிய மனு: ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை: தமிழக அரசு ஏழை குடும்பங்களுக்கு வழங்கும் ரூ.2000 சிறப்பு நிதி திட்டத்தை நிறுத்து வைக்க கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நிதிச்சுமை இருக்கும் நிலையில், தேர்தலை மனதில் கொண்டு ரூ.2000 தருவதாகவும், எனவே இந்த திட்டத்தை நிறுத்தக்கோரியும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, 110 விதியின் கீழ் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 சிறப்பு நிதியாக வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். கஜா புயல் மற்றும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மதுரையை சேர்ந்த தினேஷ் பாபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கும்  திட்டம் பிப்ரவரி 24ல் தொடங்கி  பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் நிறைவடையும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால், குறைந்த நாட்களில் உரிய பயனாளிகளைக் கண்டறிந்து வழங்க இயலாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், கஜா புயல் பாதிப்பு தமிழகம் முழுவதும் ஏற்படாத நிலையில், அனைவருக்கும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர்  மனுவில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள இந்த சூழலில் வாக்காளர்களை கவரும் விதமாக இந்த அறிவிப்பு உள்ளதால், தேர்தல் முடியும் வரை இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களின் கணக்கு விவரங்களையும் சமர்ப்பித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இந்த திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று காலை தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தின்கீழ், நகர்பகுதிகளில் வசிக்கும் 25 லட்சம் பேருக்கும், கிராமப்பகுதிகளில் ‌வசிக்கும் 35 லட்சம் பேருக்கும் இந்த நிதி உதவி, அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இதன் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி சில பலனாளிகளுக்கு தலைமைச் செயலகத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,Rs , Special Fund, Rs.2000, Manu, Discount, High Court Madurai branch
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...