×

மாவட்ட செயலாளர் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் பேரணி

திருப்பூர்: திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடந்த மார்ச் 1ம் தேதி, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை பணிநீக்கம் செய்து, தற்போது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருக்கக்கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டார். மேலும் 2 மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள், தங்கள் தலைவருக்கு ஆதரவாக இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து முற்றுகையிட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதரவாளர்கள் நடுவே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுக கட்சி தலைமைக்கு எதிராக அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களே களத்தில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த மோதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பை மீண்டும் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கக் கோரி, அவரது ஆதரவாளர்கள் பேரணியாக வந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மனு அளித்தனர். முன்னதாக, அவர்களை உள்ளே அனுமதிக்காததால், அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு 5 நிமிடம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : District Secretary ,Udumalai Radhakrishnan , Minister Udumalai Radhakrishnan,dismissal,supporters,march
× RELATED சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்...