×

கோடை விடுமுறையை முன்னிட்டு கோவையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் சேலம் வழியே இயக்கம்

சேலம்: கோடை விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு கட்டண ரயில் சேலம் வழியே இயக்கப்படுகிறது. கோவை- திருச்சி(06025) இடையே ஏப்ரல் 9, 16, 23, 30 மற்றும் மே 7, 14, 21, 28ம் தேதிகளில்  இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், கோவையில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.15 மணிக்கு  திருச்சிக்கு சென்றடையும். இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் வழியாக திருச்சிக்கு செல்கிறது. இதேபோல், சென்னை சென்ட்ரல்- கோவை(06033) இடையே ஏப்ரல் 8, 15, 22, 29 மற்றும் மே 6, 13, 20, 27ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து  இரவு 8.45  மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.15 மணிக்கு  கோவைக்கு சென்றடைகிறது. இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை செல்கிறது.
 
திருச்சி- எர்ணாகுளம்(06026) இடையே ஏப்ரல் 6, 20, 27 மற்றும் மே 4, 11, 18, 25ம் தேதிகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில், திருச்சியில் இருந்து மதியம் 2.20மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு எர்ணாகுளத்துக்கு சென்றடைகிறது. இந்த ரயில், ஸ்ரீரங்கம், அரியாலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர் வழியாக எர்ணாகுளத்துக்கு செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,Velankanni , Summer Holiday, Coimbatore, Tiruchy, Special Train, Salem, Operation
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்