×

சிதம்பரம் கோயிலில் கின்னஸ் சாதனைக்காக 7,195 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி

சிதம்பரம்:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனந்த தாண்டவம் கோலத்தில் உள்ள நடராஜர் சிலை முன் பரதநாட்டிய கலைஞர்கள், நாட்டியாஞ்சலியாக ஆடுவார்கள். மகாசிவராத்திரி விழாவையொட்டி நடராஜர் கோயிலில் இன்று முதல் 8ம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, கோயிலில் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் கின்னஸ் சாதனைக்காக 7 ஆயிரத்து 195 பேர் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.  அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன் தொடங்கி வைத்தார்.

பிரபல பரதநாட்டிய கலைஞரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான பத்மா சுப்பிரமணியம் நடன கலைஞர்களை வாழ்த்தி பேசுகையில், `இங்கு சுமார் 7,195 பேர் ஒரேநேரத்தில் பரதம் ஆடியது வேறு எங்கும் கிடையாது. இதற்கு முன் சென்னையில் உலக சாதனைக்காக 4,426 பேர் பரதம் ஆடினர்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chidambaram Temple , Chidambaram Temple, Guinness Record, Bharatanatyam
× RELATED சிதம்பரம் கோவிலில் பொது தீட்சிதர்கள்...