×

கைதிகளுக்கு கஞ்சா வினியோகித்ததால் சஸ்பெண்ட் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி: புழல் காவலர் குடியிருப்பில் பரபரப்பு

புழல்: புழல் காவலர் குடியிருப்பில் பூச்சிமருந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் லிவிங்ஸ்டன் பிரபு (26). சென்னை புழல் சிறை போலீஸ்காரர். புழல் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக சிறை கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் உள்ளிட்ட  பொருட்களை எடுத்துச் சென்று கொடுத்து அதன் மூலம் பணம் பெற்று வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக சிறைத்துறை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் அவரை சஸ்பெண்ட் செய்தது. பின்னர் பணிக்கு திரும்பிய லிவிங்ஸ்டன் மீண்டும் சிறை கைதிகளுக்கு கஞ்சா,  செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து சென்று கொடுத்து பணம் பெற்றதாக தெரிகிறது.

எனவே சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீண்டும் விசாரித்து, நேற்று முன்தினம் 2வது முறையாக சஸ்பெண்ட செய்தனர். இதனால் மனம் உடைந்த லிவிங்ஸ்டன் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பூச்சிமருந்து குடித்து  வீட்டுக்கு வெளியே விழுந்து கிடந்தார்.
இதை பார்த்த சக போலீஸ்காரர்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prisoners ,detainees , Ganja distributed , prisoners, Suspension ,policeman, suicide attempt:
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்