×

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது: அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ‘அமெரிக்க பொருட்களுக்கு அதிகம் வரி விதிக்கும் நாடு இந்தியா. அதேபோல் நாமும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும்’’ என அதிபர் டிரம்ப் தனது ஆதாரவாளர்களிடம் கூறியுள்ளார். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கடந்த ஜனவரி 24ம் தேதி பேட்டியளித்த அதிபர் டிரம்ப், ‘‘அமெரிக்கா விற்பனை செய்யும் ஹார்லே-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதித்து  வந்தது. இது குறித்து இந்தியாவிடம் 2 நிமிடம் பேசினேன். இதையடுத்து இந்த வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால், இந்தியா விற்பனை செய்யும் மோட்டார் சைக்கிளுக்கு நாம் 2.4 சதவீத வரி மட்டுமே விதிக்கிறோம்’’ என  கூறியிருந்தார். இந்நிலையில், தலைநகர் வாஷிங்டன் மேரிலேண்ட் பகுதியில்  அரசியல் நடவடிக்கை குழு மாநாடு  நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிபர் டிரம்ப் 2 மணி நேரத்துக்கு மேலாக பேசினார்.  உள்நாட்டு விஷயங்கள்,  சர்வதேச விஷயங்கள், இந்தியா உடனான இருதரப்பு உறவு என பல விஷயங்கள் பற்றி அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது இந்தியா பற்றி அவர் கூறியதாவது:

 நமது பொருட்களுக்கு இந்தியா அதிகம் வரி விதிக்கிறது. அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு, இந்தியா 100 சதவீதம் வரி விதிக்கிறது. ஆனால், இந்திய மோட்டார் சைக்கிளுக்கு நாம் விதிக்கும் வரி கிட்டதட்ட ஒன்றுமே இல்லை.  இதற்கு நாம் அனுமதிக்க கூடாது. இந்தியாவை போல் நாமும் சம அளவில் வரிவிதிக்க வேண்டும். 100 சதவீதம் இல்லையென்றாலும், 25 சதவீதமாவது வரி வதிக்க வேண்டும். இதையே நான் முட்டாள்தனமாக உணர்கிறேன். நாம் விதிக்கும் வரியும் 100 சதவீதமாக இருக்க வேண்டும். உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்பதால்தான் 25 சதவீத வரி விதிக்க விரும்புகிறேன். மற்ற நாடுகள் அமெரிக்காவை மதிப்பதில்லை. நாம் முட்டாள்கள் என  அவர்கள் நினைக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்கா தற்போது வளர்ச்சி பெற்று வருகிறது. உலக நாடுகள் அமெரிக்காவை மீண்டும் மதிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Trump ,US , India ,higher taxes , US, goods
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்