×

துளித் துளியாய்

* தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துள்ளது.  உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் ஜூன் 16ம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ள லீக் ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
* பல்கேரியாவில் நடைபெற்று வரும் மல்யுத்த சாம்பியன்சிப் தொடரின் ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜார்டன் ஆலிவரை  12-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய அவர், தனது தங்கப் பதக்கத்தை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு சமர்ப்பிதாக அறிவித்தார்.
* இங்கிலாந்து அணிக்கு எதிராக புதிய எழுச்சியுடன் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை தொடரில் அனைத்து அணிகளுக்கும் மிகப் பெரிய சவாலாக விளங்கும் என்று ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ  கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Drop ,dot
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...