குடும்ப சொத்துக்கணக்கை கேட்பதில் எந்த தவறும் இல்லை: சந்துரு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி

ேதர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து விவரம், கல்வி தகுதி குறித்து உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறி உள்ளது. தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியதை உச்சநீதிமன்றம் ஒரு பொது நல வழக்கில் வேட்பாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது சொத்து என்பது உன் சொத்து மட்டுமே இல்லை குடும்ப சொத்து தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கேட்க வேண்டும். தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் நிற்கின்றனர். வேட்பாளர் சொத்துக்களை மட்டுமல்ல அவர்களது குடும்ப சொத்துக்களையும் இதன் மூலம் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் தனிநபரின் சொத்து மட்டுமல்ல அவருடைய குடும்ப சொத்தையும் சேர்த்து தான் கணக்கிடுவார்கள். குடும்ப சொத்துக்களை சேர்க்கும்போது இது என் சொத்து. அவர் ெசாத்து இல்லை என்று கோர்ட்டில் வேண்டுமானால் நிரூபிக்கலாம்.

ஆனால், கணக்கில் சேர்த்து கொள்ளும்போது நேரடியாக மனைவி, குழந்தைகள் சேர்த்துதான் சொத்துக்களை கணக்கிடுவார்கள். அவர்கள் விளக்கம் கொடுக்கும்போது அந்த சொத்தை கணக்கில் இருந்து வெளியேற்றுவார்கள்.

ஒருவர் தனது வேட்புமனுவில் ஒரு கார் கூட இல்லை என்று கூறுகிறார். ஆனால், நான்கு கார் வைத்திருப்பார். அந்த நான்கு காரை பயன்படுத்துவதை நாம் பார்க்க முடியும். ஆனால், அவரிடம் கேட்டால் இந்த கார் மனைவி பெயர், மச்சான் பெயரில் உள்ளது என்று கூறுவார்கள். சொத்து யார் பெயரில் உள்ளது என்பதை விட அந்த சொத்தை அவர்கள் அனுபவிக்கிறார்களா என்று தான் பார்க்க வேண்டும். இப்போது, வேட்பாளர்கள் தனது குடும்ப சொத்தை தாக்கல் செய்யும் போது, அனைத்து சொத்துக்களின் விவரங்கள் வெளியே தெரிய வரும். எங்களுக்கு சம்பந்தமில்லாத விவரங்களை கேட்கிறார்கள். குடும்பம் என்றால் யாரையெல்லாம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கேட்கலாம். குடும்பம் என்றால் நெருங்கிய சொந்தங்கள் தான் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு உரிய விளக்கம் தரலாம்.

ஆனால், இந்த உச்சநீதிமன்ற உத்தரவு தவறு என்று யாராலும் கூற முடியாது. யாராவது ஒருவருடைய சொத்தை எல்லாம் என் சொத்து  என்று கூறுகின்றனர் என்று வேட்பாளர்கள் சொல்லலாம். ஆனால், அவர்கள் தேர்தலில் நிற்கும்போது அதை சொல்லித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயம் வரும் போது, அவர்கள் குடும்ப உறுப்பினரின் சொத்து கணக்குகளை தாக்கல் செய்து தான் ஆக வேண்டும். சொத்துக்களின் விவரங்களை சரியாக தெரிவிக்காமல் வேட்பாளர்கள் மறைக்கும் பட்சத்தில், முறைகேடாக தேர்தலில் நின்றதாக இந்திய தேர்தல் ஆணையம் வழக்கு தொடர முடியும். இல்லையெனில் அவர்களது வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கவும் முடியும். தேர்தலை நியாயமான முறையில் நடத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை. சொத்து விவரங்களை சரியாக  தெரிவிக்காமல் வேட்பாளர்கள் மறைக்கும் பட்சத்தில், முறைகேடாக தேர்தலில்  நின்றதாக இந்திய தேர்தல் ஆணையம் வழக்கு தொடர முடியும். இல்லையெனில்  அவர்களது வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்கவும் முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: