×

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறைகள், குணா குகைகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர். நேற்று முன் தினம் இரவில், கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் நேற்று கொடைக்கானலில் இதமான தட்பவெப்ப சூழ்நிலை நிலவியது. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tourist places ,Kodaikanal , Kodaikanal, tourists
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்