×

விமானி அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை: எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவில் தகவல்

டெல்லி: அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக  கடந்த மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாமின் நிலைகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமான ஓட்டிய மிக்ரக  விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். இதில் விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அதன்பின் சர்வதேச அழுத்தம்,  இந்தியாவின் நெருக்கடிகள் ஆகியவற்றால், 3 நாட்களுக்கு பின் அபிநந்தனை கடந்த 1-ம் தேதி வாகா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

இந்நிலையில், இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படும் முன்பு, பாகிஸ்தான் வீடியோவை பதிவு செய்ததாகவும், அதில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசும்படியாக அவருக்கு நெருக்கடி கொடுத்து, இந்த வீடியோ  எடுக்கப்பட்டதாவும் தெரிகிறது. இந்த வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைக்க, தாமதம் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவில் சுமார் 15க்கும் மேற்பட்ட  இடங்களில் ‘எடிட்’ செய்யப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசுவது மட்டுமே இடம் பெற்றுள்ளதால், அபிநந்தனின் கட்டாய வாக்குமூலம் பெறப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்திய விமானப்படை தளபதி  தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விங் கமாண்டர் அபிநந்தன் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, அபிநந்தனுக்கு நேற்று காலை 11.30 மணிக்கு டெல்லி துவாலக்குவான் ராணுவ  மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பாகிஸ்தானிடம் சிக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், தன்மீது அந்நாட்டு ராணுவத்தினர் உடல்ரீதியாக தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், மனரீதியாக நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்ததாக செய்திகள் வந்தன. பாகிஸ்தான் உளவுத்துறையினர் அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதேனும் பொருத்தி அனுப்பியிருக்கலாம் என்ற யூகச்செய்திகளும் சில ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், டெல்லி ராணுவ  மருத்துவமனையில் அவருக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கேன் முடிவுகளின்படி அபிநந்தனின் உடலில் உளவுபார்க்கும் கருவி ஏதும் பொருத்தப்படவில்லை. ஆனால், அவரது முதுகுத்தண்டு எலும்பின் கீழ் பகுதியில் ஒரு காயம்  ஏற்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அபிநந்தனின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்குவதற்கு முன்னர் அவர் பாரசூட் மூலம் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் இந்த காயம்  ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pilibhit ,end , Pilot Abhinandan, spy tool, MRI Scan
× RELATED காய்ந்த புற்களை தீயில் எாிப்பு-சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு